குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் இன்று தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று (மார்ச் 15) முதல் இருகட்டங்களாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல்கட்டமாக மார்ச் 15 (இன்று) முதல் 20-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக மார்ச் 22 முதல் 27-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. முகாமில் விடுபட்டவர்களுக்கு மார்ச் 29 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

இந்த முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள வளரிளம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன் வாடி பணியாளர் கள் மூலம் மாத்திரைகள் வழங் கப்பட உள்ளன.

அதன்படி, திருச்சி மாவட்டத் தில் 7,52,989 குழந்தைகள், பெரம் பலூர் மாவட்டத்தில் 1,64,119 குழந்தைகள், அரியலூர் மாவட் டத்தில் 2,04,651 குழந்தைகள் இந்த முகாமில் பயனடைய உள்ளனர் என ஆட்சியர்கள் சு.சிவராசு(திருச்சி), ப.வெங்கட பிரியா (பெரம்பலூர்), த.ரத்னா (அரியலூர்) ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்