மண்ணச்சநல்லூர் தொகுதியில் - திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூர் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.கதிரவன் அறிவிக்கப்பட்டுள் ளார்.

இவர் நேற்று தொகுதிக்கு உட் பட்ட எதுமலை, சீதேவிமங்கலம், வாழையூர், மணியாங்குறிச்சி, மேலவங்காரம், கீழவங்காரம், ஆய்குடி, சிறுகனூர், சி.ஆர்.பாளையம், திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், பிச்சாண்டவர் கோவில், கூத்தூர், கல்பாளை யம், ஈச்சம்பட்டி, சமயபுரம், எஸ்.புதூர், கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து வாக்கு சேக ரித்தார்.

அப்போது சிறுகனூர் மற்றும் பெரகம்பியில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் எஸ்.கதிரவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

முன்னதாக திமுக வேட்பா ளர்கள் என்.தியாகராஜன்(முசிறி), கதிரவன்(மண்ணச்சநல்லூர்), ஸ்டாலின்குமார் (துறையூர்) ஆகியோர் முசிறியில் தலை வர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றியச் செயலாளர்கள் இளங் கோவன்(மண்ணச்சநல்லூர் கிழக்கு), செந்தில்குமார் (மண் ணச்சநல்லூர் மேற்கு), காட்டுக் குளம் கணேசன் (முசிறி கிழக்கு), ராமச்சந்திரன்(முசிறி மேற்கு), மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்