வேலூரில் வாகன சோதனையின்போது - ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

வேலூர் கொணவட்டம் அருகே ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் கொணவட்டம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேலூரில் இருந்து பொய்கை நோக்கி சென்ற லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் டவர் பேன்கள், குக்கர்கள், சோப்புகள், கேஸ் அடுப்பு உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்