காஞ்சிபுரத்தில் உரிய ஆவணம் இன்றி - மினி லாரியில் கொண்டு வரப்பட்ட 3 டன் அரிசி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட 3 டன்அரிசியை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

சட்டபேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4சட்டபேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள்,வீடியோ கண்காணிப்பாளர்கள், தேர்தல் நிலை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் பறக்கும் படை குழுவினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். காஞ்சிபுரத்தில் இருந்தது ஆரணிக்கு செல்லும் மினி லாரியை சோதனை செய்ததில் அதில் 3 டன் அரிசி இருந்தது.

அப்போது ஓட்டுநரிடம் இந்த அரிசி எடுத்துச் செல்வதற்கு உரியஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்த அரிசியை பறக்கும் படையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து அரிசியை பெற்றுச் செல்லும்படி மினி லாரி ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்