தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வரும் வாகன உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அல்லது 6 மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என மோட்டார் வாகனத் துறை எச்சரித்துள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பொதுக்கூட்டத்திற்கோ, தேர்தல் பிரச்சாரத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வந்தால், வாகனம் சிறை பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்படும். சிறைப்பி டிக்கப்படும் வாகனத்தின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல் லது நிரந்தரமாகவோ ரத்து செய் யப்படும்.
ஓட்டுநரின் உரிமை ரத்து செய்யப்படும், மேலும் நீதி மன்றத்தால் ரூ.10 ஆயிரம் அப ராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம் என மோட்டார் வாகனத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago