ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.50 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் பழநி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தினர் நாட்டுச் சர்க்கரையை கொள்முதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கரும்புச் சர்க்கரை ஏலம் நடைபெறுவது வழக்கம். இங்கு பழநி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தினர் பஞ்சாமிர்தம் பிரசாதம் தயாரிக்க நாட்டுச் சர்க்கரையை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. கவுந்தப்பாடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 62 விவசாயிகள் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் 60 கிலோ மூட்டை ரூ.2,210 முதல் ரூ.2,300 வரை ஏலம் போனது. இதன்படி மொத்தம் 2,264 மூட்டைகளை ரூ.50 லட்சத்து 43 ஆயிரத்துக்கு பழநி கோயில் நிர்வாகத்தினர் ஏலம் எடுத்தனர், என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் மு.சீனிவாசன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago