234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: ஆர்.வைத்திலிங்கம் :

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரி வித்தார்.

இதுதொடர்பாக, தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி தற்போது சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதால், அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. தமிழ கத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என்பதுதான் அதிமுக தேர்தல் அறிக்கை யின் கதாநாயகன். குடிமராமத்துப் பணிகள், கல்லணைக் கால்வாய் சீரமைப்பு திட்டம், விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, புயல்- தொடர் மழை நிவாரணம், பொங்கலுக்கு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.2,500 என பல் வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார். எனவே, அதிமுகவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE