புதிய வாக்காளர்களுக்கு விரைவு தபாலில் அடையாள அட்டை :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளாக கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை புதிய வாக்காளர்கள், பெயர்திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப் பட்டது. இதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வரப் பெற்றுள்ளன.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘புதிய வாக் காளர்களுக்கான அடையாள அட்டை அவர்களின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் இறுதிக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று வாக்காளரின் செல்போன் எண்ணை பதிவு செய்தால் ஒருமுறை உள்ளீட்டு அடையாள எண் வரப்பெறும். இதனை உறுதி செய்ததுடன் இ-எபிக் என்ற பகுதியை பதிவிறக்கம் செய்தால் வாக்காளரின் அடையாள எண்ணைதேடி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும். விவரங்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்