தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த 1,200-க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி களில் துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சமூக இடை வெளியை கடைபிடிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த 10 வகையான பொருட்களை வாக்குச் சாவடி களுக்கு வழங்க தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 500 மிலி சானிடைசர் பாட்டில் 7, 100 மிலி சானிடைசர் பாட்டில் 11, முகக்கவசம் (பேஃஸ் ஷீல்ட்) 11, சர்ஜிக்கல் மாஸ்க் 66, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரப்பர் கையுறைகள் 33 ஜோடி, வாக்குச்சாவடி அலுவலர்கள் அணிவதற்கான கரோனா பாது காப்பு உடை (பிபிஇ-கிட்) 13, வாக்காளர்கள் ஒருமுறை பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கையுறைகள் 1,200, கரோனா தடுப்புப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய பைகள் 6, கரோனா கழிவுகளை அகற்றுவதற்கான பை 1, இரண்டடுக்கு துணியால் ஆன முகக்கவசம் 30 என 10 வகையான பொருட்களை வழங்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago