செய்யாறு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி - 2-வது நாளாக அதிமுகவினர் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

செய்யாறு அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி அக்கட்சியினர் நேற்று 2-வது நாளாக ஊர்வலம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக தூசி கே.மோகன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெம்பாக்கம் அடுத்த மாங்கால் கூட்டுச்சாலையில் அதிமுகவினர் நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள், ‘செய்யாறு அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகனை மாற்றம் செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டபடி’ ஊர்வலமாக புறப்பட்டனர். சிப்காட் வளாகம் வழியாக ஊர்வலமாக சென்ற வர்கள், பின்னர் மாங்கால் கூட்டுச் சாலையை வந்தடைந்தனர்.

இதையடுத்து அவர்கள், அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “செய்யாறு தொகுதி யின் வளர்ச்சிக்கு உதவாத தூசி கே.மோகனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. தனது நலனில் அக்கறை செலுத்திய அவர் போட்டியிட்டால், செய்யாறு தொகுதியில் அதிமுக தோல்வியை சந்திக்கும். தொண்டர்களின் இயக்கம் என்று கூறப்படும் அதிமுகவில், வேறொரு நபருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்றனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி செய்யாறில் நேற்று முன்தினம் ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடைபெற்ற நிலையில், 2-வது நாளாக வெம் பாக்கம் பகுதியில் போராட்டம் நடைபெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்