முதல் நாள் மனுத்தாக்கல் செய்ய வராததால் விழுப்புரத் தில் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், விழுப்பு ரம், செஞ்சி, மயிலம், திண்டிவனம்(தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. விழுப்புரம் தொகுதிக்கு பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதே போல் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம், திண்டிவனம் சார் ஆட்சியர்அலுவலகம், வானூர் வட்டாட் சியர் அலுவலகம், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. மனுத்தாக் கலை யொட்டி நேற்று விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. நேற்று யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago