நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்கு சைக்கிள் யாத்திரை நேற்று தொடங்கியது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் அடுத்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. அதன்படி, திருச்சியிலிருந்து உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற வேதாரண்யத்துக்கு நடை பயணம், சைக்கிள் யாத்திரை நேற்று தொடங்கியது.
இதையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அஞ் சலக திருச்சி கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் அருகேயுள்ள உப்பு சத்தியாகிரக நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அங்கு கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி, அஞ்சலக திருச்சி கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற தெருக்கூத்து நடன நிகழ்ச்சி ஆகியவற்றை பார்வை யிட்டபின், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவித் தனர்.
தொடர்ந்து, உப்பு சத்தியாகிரக நினைவுச் சின்னத்திலிருந்து காந்தி மார்க்கெட் வரையிலான நடை பயணத்தையும், காந்தி மார்க் கெட்டில் இருந்து வேதாரண்யம் வரை சைக்கிள் யாத்திரையையும் தொடங்கிவைத்தனர். இந்த சைக் கிள் யாத்திரை வேதாரண்யத்தில் நாளை(மார்ச் 14) நிறைவடைய வுள்ளது. நடைபயணம் மற்றும் சைக்கிள் பேரணியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் மற்றும் பெரியார் ஈவெரா கல்லூரி, நேரு யுவகேந்திரா, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரங்கம் அரசுக் கல் லூரி, சேதுராப்பட்டி பாலிடெக் னிக் கல்லூரி, தேசியக் கல்லூரி, திருவையாறு இசைக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ, மாண விகள் 2,000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் த.ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாந கராட்சி ஆணையர் சு.சிவசுப்பிர மணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago