பெரம்பலூர் அருகே வாலிகண் டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
மகா சிவராத்திரி விழாவை யொட்டி, வாலீஸ்வரருக்கு பல் வேறு பொருட்களால் அபிஷே கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு, மகா தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி மயான சூறை திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மாலை சந்தனக்காப்பு அலங் காரத்துடன் குடி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான காளி புறப்பாடு இன்று (மார்ச் 13) காலை 7 மணிக்கு நடைபெறும். 10 மணிக்கு வல்லாளராஜன் கோட்டை இடித்தல் குடல்பிடிங்கி மாலை அணிதல், பகல் ஒரு மணிக்கு பெரம்பலூர் துறையூர் சாலையில் மேம்பாலம் அருகே தோப்பு பகுதியில் மயான சூறை மற்றும் சாமி ஊர்வலம் ஆகியன நடைபெறும்.
நாளை (மார்ச் 14) இரவு வீரபத்திரர் சுவாமி ஊர்வலமும், மார்ச் 15-ல் பொங்கல், மாவிளக்கு மற்றும் அம்மன் ஊர்வலமும் நடைபெற உள்ளது. மார்ச் 16-ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago