தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்புமனு தாக்கலுக்கு முன், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. திருநெல்வேலி தொகுதிக்கு திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்திலும், பாளையங் கோட்டை தொகுதிக்கு மாநக ராட்சி அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்திலும், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்திலும், நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகங் களிலும் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.
2 தேர்தல் செலவின பார் வையாளர்கள், 4 பொது பார்வை யாளர்கள் என, மொத்தம் 6 தேர்தல் பார்வை யாளர்கள் வரவுள்ளனர் என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago