வாக்கு எண்ணும் மையமான சி.முட்லூர் அரசு கல்லூரியில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக புவனகிரி பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டதையும் பார்வையிட்டார். இதை தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்றார். அனைவரும் வாக்களிப்பது கடமை என்பதை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்(கட்டிடம்)பாபு, மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, புவனகிரி தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago