வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிக ‘லிப்ட்’ வசதி : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிக லிப்ட் வசதி செய்யப்பட உள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கொ.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை மையம் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை நாமக்கல் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறுகையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த படி 12 அறைகள், அறைக்கு ஏழு மேசைகள் என்று இருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ஆறு அறைகள் மற்றும் அறைக்கு 14 மேசைகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 மற்றும் 4-வது மாடிகளில் வாக்கு எண்ணிக்கை மையம், ஸ்டிராங் ரூம் இருப்பதால் பணியாளர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தற்காலிக லிப்டுகள் அமைக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

மனுதாக்கல் செய்யும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ராசிபுரம் தொகுதி - ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம், சேந்தமங்கலம் தொகுதி - சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் தொகுதி - நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம், பரமத்தி வேலூர் தொகுதி - பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம், திருச்செங்கோடு தொகுதி - திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குமாரபாளையம் தொகுதிக்கு, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்யலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்