திருச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வருவோருக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியைக் கடைபிடிக் காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித் துள்ளது:
கரோனா பரவல் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மருத்துவத் துறையினர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசிகள் இடப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முகக்கவசம் அணி வதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்துக் கொள்வதுடன், அதிக கூட்டம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்தநிலையில், கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோருக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி அபராதம் விதிக்கப்படவுள்ளது. அதன்படி, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல, வணிக நிறுவனங் கள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் காணப்படும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாதபட்சத்தில், அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago