இறந்தவர் சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் அதை கண்டித்து ஆர்.டி.மலையில் சாலை மறியல் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை தெற்கு தெருவில் உள்ள பொதுப் பாதையை தனிநபர் ஆக்கிரமித் துள்ளதாக கூறப்படுகிறது. அத்தெருவைச் சேர்ந்த பஞ்ச வர்ணம்(65) நேற்று உயிரிழந்தார். அவரது சடலத்தை எடுத்துச் செல்வதற்காக உறவினர்கள், பொதுமக்கள் பொக்லைன் மூலம் பொதுப்பாதையை சரி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது, பாதையை ஆக்கிரமித் துள்ளதாக கூறப்படும் தனிநபர், பொதுப்பாதை வழியாக இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த பஞ்சவர்ணத்தின் உறவினர்கள், பொதுமக்கள் ஆர்.டி.மலை பேருந்து நிறுத்தத்தில் திருச்சி-தோகைமலை சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த குளித்தலை டிஎஸ்பி சசீதர், ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னையன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, பொக்லைன் மூலம் பொதுப்பாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. மேலும், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், மறியல் ைவிடப்பட்டது. மறியலால் திருச்சி, தோகைமலை சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago