திருச்சி மாவட்டத்தில் இதுவரை 30,000 பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 30,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் ஜன.16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட் டோருக்கும், அதைத்தொடர்ந்து பல்வேறு நிலை முன்களப் பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி மார்ச் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், 45 வயது முதல் 59 வரையுள்ள தொற்றா நோய்களால் (நீரிழிவு, ரத்த அழுத்தம்) பாதிக்கப்பட்டுள் ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உட்பட 9 அரசு மருத்துவமனைகள், 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 42 தனியார் மருத்துவ மனைகளில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி, ஜன.16-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் மருத் துவத் துறையினர், முன்களப் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் என 30,000 பேருக்கு முதல் கட்ட கரோனா தடுப்பூசியும், 5,000 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியது:

“கரோனா தொற்றாமல் இருக்க பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மேலும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதுடன், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரசு அறிவுறுத்தியுள்ள வயதி னர், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்