நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் - 22 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 12) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 6, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வரும் 19-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான சிவகிருஷ்ணமூர்த்தி யிடமும், பாளையங்கோட்டை தொகுதிக்கு திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான ஜி. கண்ணனிடமும், . அம்பாசமுத் திரம் தொகுதிக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான பிரதீக் தயாளிடமும், நாங்குநேரி தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் குழந்தைசாமியிடமும், ராதாபுரம் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உஷாவிடமும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தென்காசி தொகுதிக்கு தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்திலும், சங்கரன்கோவில் தொகுதிக்கு சங்கரன்கோவிலில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்திலும், கடையநல்லூர் தொகுதிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சமூகபாது காப்புத் திட்ட துணை ஆட்சியர் அலுவலகத்திலும், வாசு தேவநல்லூர் தொகுதிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத் திலும், ஆலங்குளம் தொகுதி க்கு தென்காசி ஆட்சியர் அலு வலகத்திலுள்ள கலால்பிரிவு உதவி ஆணையர் அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி தொகுதிக்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம், திருச்செந்தூர் தொகுதிக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம், வைகுண்டம் தொகுதிக்கு வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், கோவில்பட்டி தொகுதிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்படுகிறது. நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஆட்சியர் அலுவல த்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கு குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பத்நாபபுரம் தொகுதிக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதிக்கு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், கிள்ளியூர் தொகுதிக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்