திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் சோதனையில் ரூ.24.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தேதி கடந்த மாதம் 26-ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் தலா 3 தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டனர். அவர்களது பணி கடந்த 27-ம் தேதி இரவு முதல் தொடங்கியது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்பில் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகின்றன. கடந்த 12 நாட்களாக நடத்தப்பட்டு வரும் சோதனையில், 25 பேரிடம் இருந்து ரூ.24 லட்சத்து 90 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.10,540 மதிப்பில் 527 கிலோ எடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் படம் அச்சிடப்பட்ட துணிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்,அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது. உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ள, உரியவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 7 பேரிடம் ரூ.8 லட்சத்து 96 ஆயிரத்து 950-ஐ ஆய்வு குழு மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசியல் கட்சி பிரமுகர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்றவர்களிடம் இருந்து மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago