இளம் வயதினருக்கு அதிகமாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் தெரிவித்தார்.
கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் ‘இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (சாக்கெட் சயின்ஸ்-2021)’ பயிற்சியின் 10-வது ஆண்டு விழா நடைபெற்றது.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலர் பங்கேற்றனர். மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஜான்சன் அன்டு ஜான்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் மக்காருக்கு பிரித்வி மோகன்தாஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது:
எலும்பு மருத்துவத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடுப்பு மூட்டு பிரச்சினை ஏற்படுகிறது.
ஒருமுறை மூட்டு மாற்று செய்தால் 15 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதேபோல், மூன்று முறை மூட்டு மாற்று செய்யலாம். ஒருவர் 45 ஆண்டுகள் செயற்கை மூட்டுடன் இருக்க முடியும். இளம் வயதினருக்கு அதிகமாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது.
மது அருந்துவது, ஆஸ்துமா, நரம்பு பிரச்சினை, தால்சீமியா, சிக்கில் செல் உள்ளிட்ட பல நோய்களால் இளம் வயதினருக்கு மூட்டு பிரச்சினை ஏற்படுகிறது. இளம் வயதினருக்கும், முதியவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக மூட்டு மாற்று செய்ய வேண்டும்.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பயிற்சியில் 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago