காஞ்சிபுரம் மாவட்டத்தில் - 12,903 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 12,903 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது தடுப்புமருந்துகள் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை பொதுமக்களுக்கு போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாக போடப்பட்டன.

இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக காவல் துறையில் பணிபுரிவர்களுக்கு போடப்பட்டது. தற்போது சட்டபேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும்பணியும் தொடங்கியுள்ளது.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட நீரழிவு நோய் உள்ளவர்களுக்கும் தற்போதுகரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 12,903 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்