விக்கிரவாண்டி அருகே - துணி பண்டல்கள் ஏற்றிய லாரி தீப்பிடித்து எரிந்தது :

By செய்திப்பிரிவு

விக்கிரவாண்டி அருகே துணி பண்டல்கள் ஏற்றிய லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருப்பூரிலிருந்து கொல்கத் தாவிற்கு துணி பண்டல் ஏற்றியலாரி நேற்று முன்தினம் புறப்பட் டது. லாரியை திருச்சி, துறையூர் அருகே உள்ள செங்காட்டுபட்டியை சேர்ந்த சுரேஷ்(35) என்பவர் ஓட்டி வந்தார். உடன் கிளீனர் துறையூர் பொன்னுசங்கம்பட்டியைச் சேர்ந்த நடராஜ் (33) என்பவர் இருந்தார்.

லாரி நேற்று பிற்பகல் விக்கிர வாண்டியில் தனியார் கல்லுாரி எதிரே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் வலது முன்புற டயர் திடீரென வெடித்தது. இதனால் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கியது. ஓட்டுநரும், கிளீனரும் லாரியில் இருந்து குதித்து தப்பினர் .

இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் திருச்சி - சென்னை சாலையில் சென்ற வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். மேலும் விக்கிரவாண்டி, விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான தீயணைப்புப் படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக லாரியில் இருந்த துணி பண்டல்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. லாரியும் முற்றிலும் எரிந்தது . இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்