சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் - நாளை முதல் 8 இடங்களில் வேட்பு மனு தாக்கல் : வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை 8 இடங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான, வேட்பு மனு தாக்கல் நாளை (12-ம் தேதி) முதல் வரும் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி வேட்பு மனு தாக்கல் நடைபெறவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட வேண் டும். விடுமுறை நாளான 13 மற்றும் 14-ம் தேதி ஆகிய 2 நாட்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெறாது.

செங்கம் (தனி)

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்பு பவர்கள் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜி.வெங்கடேசன் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் திருவண்ணா மலை கோட்டாட்சியர் அலுவல கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வீ.வெற்றிவேல் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். கலால் உதவி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.கண்ணப்பன் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும் புபவர்கள் கலசப்பாக்கம் வட்டாட் சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.பார்த்திபன் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.

போளூர்

போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எம்.ரமேஷ் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

ஆரணி

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்பு பவர்கள் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக் களை தாக்கல் செய்ய வேண்டும். கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆர்.பூங்கொடி வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

செய்யாறு

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள், செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ந.விஜயராஜ், வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

வந்தவாசி (தனி)

வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி.கீதாலட்சுமி வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20-ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை வரும் 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெற வேண்டும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்