வேலூர்  நாராயணி பீடத்தில்  சூக்தம் யாகம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நாராயணி பீடத்தில் நடைபெற்ற மகாலட்சுமி யாகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஆகியோர் பங் கேற்றனர்.

வேலூர் அடுத்த அரியூர்  நாராயணி பீடத்தில் உலக மக்கள் அமைதிக்காகவும், இயற்கை வளத்துக்காகவும், கரோனா தொற்றில் இருந்து நாட்டு மக்கள் மீண்டு ஆரோக்கியமாக வாழ சிறப்பு யாகம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த யாகத்தில் தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இருந்து பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு,  சக்தி அம்மா தலைமையில் ‘ சூக்தம்’ என்ற மகாலட்சுமி மந்திரத்தை 1 லட்சம் முறை படித்து பிரம்மாண்ட மகா யாகத்தை நடத்தினர்.

இந்த யாக நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கலந்துகொண்டனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஹெலிகாப்டர் மூலம் புரம் வந்தார். அவருக்கு. புரம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து,  நாராயணி பீடம் சாந்தி மண்டபத்துக்கு குடி யரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் சக்தி அம்மா ஆகியோர் சூக்தம் மகா யாகம் நடைபெற்ற யாக சாலைக்கு வந்தனர். பிறகு அங்கு நடைபெற்ற பூர்ணாஹூதி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு, நாட்டு மக்களின் ஆரோக்கிய வாழ்வுக் காகவும், இயற்கை வளத்துக்காக வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து, யாகத்தின் நிறைவில் யாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த அன்னை மகாலட்சுமிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலச நீரை ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய் தார். அதன்பிறகு, புரம் பொற் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு, கடந்த மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்ட  சக்தி கணபதி கோயில்,  லட்சுமி நாராயணி,  சுவர்ணலட்சுமி, புரம் னிவாசபெருமாள் கோயில்களுக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

புரம் சார்பில் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோருக்கு பொற்கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு பிரசாதங்களை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி புரம் நாராயணி பீடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டகாவலர்கள் பாதுகாப்புப்பணி யில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்