தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார் இருந்தால் 1800-425-7021 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும் தேர்தல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்தல் தொடர்பான புகார் இருந்தால் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago