வீராணம் ஏரிக்கு நீர் வரத்து இல்லாத தால் நீர் மட்டம் குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதிப் பெறுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு இந்த ஏரி மிகப்பெரிய வாழ்வாதாரமாக உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில் கீழணையில் தண்ணீர் இல்லாததால் கடந்த சில நாட்களாக ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட வில்லை. இதனால் ஏரியின் நீர் மட்டம் சரிந்துள்ளது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 40.13 அடி உள்ளது. சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 49 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. விவசாய பாசனத்துக்காக விநாடிக்கு 10 கன அடி தண்ணீர் பாசன வாய்க்கால்கள் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயிலாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஏரியில் இருக்கும் தண்ணீர் 10 நாட்கள் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்க முடியும் என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago