கோயில் திருவிழாக்களில் - கலைநிகழ்ச்சி நடத்த கூடுதல் நேரம் : மேடைக் கலைஞர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய அனுமதியைப் பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தற்போது, இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதை 12 மணி வரை நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மேடைக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். திருவிழா காலங்களில்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். திருவிழா நடைபெறும் இந்த சமயத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் காவல் துறையினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு ஊர் மக்களே தயங்குகின்றனர்.

அப்படி, அனுமதியோடு நடத்தினாலும் இரவு 10 மணியோடு நிறுத்தப்படுகிறது. இதை இரவு 12 மணி வரை நீட்டித்துத்தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளோம். இது குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியை சந்தித்தும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்