4ஜி அலைக்கற்றையை உடனடியாக பிஎஸ்என்எல்-க்கு வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

அகில இந்திய ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது.

ஓய்வுபெற்ற முதன்மை கணக்கு அதிகாரி கருப்பையா தலைமை வகித்தார். சந்திரசேகரன் வரவேற்றார். சங்கத்தின் மாநில ஆலோசகர் எஸ்.காமராஜ் மாநாட்டை தொடங்கி வைத்தார். அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநாட்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய இந்நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றையை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவம் தொடர்பான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மூன்றாவது சம்பளம் மாற்றத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநிலத் தலைவராக எம்.சந்திரசேகரன், மாநிலச் செயலாளராக எஸ்.காமராஜ், மாநில நிதித்துறை செயலாளராக குருபிரசாத் உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்