பெண்களின் திறன்களை மதிக்கும் வகையில் ஆண்களுக்கு - விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : பெல் பொது மேலாளர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி பெல் நிறுவனத்தில் மகளிர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கூடுதல் பொது மேலாளர் என்.சி.பாலி தலைமை வகித்தார்.

பெல் பொது மேலாளரும், தலைவருமான டி.எஸ்.முரளி, விழாவைத் தொடங்கிவைத்து பேசியது: பெண்களின் திறன்களையும், விருப்பங்களையும் மதிக்கவும், ஆதரிக்கவும் ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் தின விழாக்களில் இனி பெண்களுக்கு அறிவுரை கூறுவதற்குப் பதிலாக ஆண்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

டி.சவுமியா முரளி, திருச்சி காவேரி மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் சாத்தம்மை பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் பெல் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.அகிலா கஸ்தூரி கவுரவிக்கப்பட்டார். முன்னதாக, வெல்டிங் ஆராய்ச்சி கழகத்தின் கூடுதல் பொது மேலாளர் ஏ.சாந்தா குமாரி வரவேற்றார். எம்.பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்