புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் அடுத்தடுத்து நடந்த நகை திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அதன்படி, பல்வேறு இடங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த அறந்தாங்கி திருநாளூர் செல்வராஜ் மகன் முருகானந்தம்(19), சேகர் மகன் விஷ்ணு என்ற மகாவிஷ்ணு(21) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 52 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 9 நகை திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago