‘தபால் வாக்கு அளிக்க புதிய வாய்ப்பு’ :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 16-ம் தேதிக்குள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளி கள், கோவிட் தொற்று ஏற்பட்டவர்கள், தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலக் கெடுவுக்குள் இருப்பவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

இதற்காக, அந்தந்த பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அலு வலரிடம் உள்ள 12-டி படிவத்தை பெற்று உரிய விவரங்களை பூர்த்தி செய்து வரும் 16-ம் தேதிக்குள் அவரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல், இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 584 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.

அந்த நாட்களில் அங்கு சென்று பதிவிறக்கம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்’’ என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்