திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து மத வழிபாட்டு தலங் களின் நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்து பேசும்போது," திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு முன்பாக ஏதாவது திருவிழா அல்லது நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தால் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு முதலில் தகவல் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் எந்த திருவிழாவும் நடத்தி பொது மக்களை அதிக அளவில் ஒரே இடத்தில் கூட்டக்கூடாது.
முன் அனுமதியில்லாமல் கோயில் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, அரசியல் ரீதியான கூட்டங்கள், நடத்த மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் அல்லது அவற்றுடன் இணைந் துள்ள மண்டபங்களை வாடகைக்கு விட அனுமதியில்லை.
திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால், திருமண விழாக்களில் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள், வாக்குச்சேகரிப்பு, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் பணிகள் நடத்துவது தெரியவந்தால் மண்டப உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடகைக்கு விடப்படும் மண்ட பங்களில் வாடகை ரசீதுகளை வெளிப்படை தன்மையுடன் வைத் திருக்க வேண்டும். அதேபோல, வெளியாட்கள் யாரேனும் பொருட்களை இருப்பு வைக்க மண்டபங்களில் அனுமதி கேட்டால் வழங்கக்கூடாது. திருமணம் நடத்த பதிவு செய்த நாட்கள் குறித்து அந்தந்த தொகுதியின் தேர்தல் அலுவலர்களுக்கு மண்டப உரிமையாளர்கள் தகவல்கள் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் பணியாளர்கள் திடீர் ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதி களில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து வழிபாட்டு தலங்களில் பேச வைக்க அனுமதியில்லை. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வெளியே தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை யில்லை.
ஒரு மதத்தின் குருக்கள் அல்லது பொறுப்பாளர்கள் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் அல்லது வாக்குகளை அளிக்க வேண்டாம் எனக்கூறி எந்த வகையிலும் அறிவிப்புகளை பொது வெளியில் வெளியிட அனுமதியில்லை. ஆகவே. மத வழிப்பாட்டு தலங்களை நிர் வகிக்கும் நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைகளை கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1800-425-5671 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago