20 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்றுள் ளோம் என்று விழுப்புரத்தில் ரவிக் குமார் எம்பி தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் விழுப்புரத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ஊரகப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்று தமிழக அரசி டம் வலியுறுத்தியிருந்தேன். அதன்அடிப்படையில், விழுப்புரம், கடலூர், சேலம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதற்காக, விழுப்புரம் நகரிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால், அதனை செயல்படுத்தப்போவது அடுத்து வரும் அரசு தான். அடுத்து திமுக ஆட்சி தான் அமைய உள்ளது. திமுக தான் இதனை செயல்படுத்தும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் விசிகவுக்கு குறைந்த எண்ணிக் கையிலான தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப் பப்படுகிறது.
ஆனால், நாங்கள் தற்போது வெற்றிக் கூட்டணியில் உள்ளோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். ஆனால், கடந்த 2006, 2011, 2016 தேர்தலில் இப்படி இல்லை. அதனால் குறைந்த இடங்களைப் பெற்று, பெற்ற இடங்களில் முழுமையாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago