திருச்சியில் வங்கி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்து, வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுத் துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

அதன்ஒரு பகுதியாக வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சி மண்டல தொலைத்தொடர்பு அலுவலக வளாகத்துக்கு வெளியே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ராமராஜ் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் கே.சுரேஷ், போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் கணபதி சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்