புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன்பத்தை ஊராட்சி குலபெண்பட்டி கிராமத்தில் 1,000 லிட்டர் கொள்ளளவில் ஒரு சிறுமின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. இது, போதுமானதாக இல்லாததால் 20,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இங்கு தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்காததைக் கண்டித்தும், உடனடியாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் குலபெண்பட்டியில் காலிக்குடங்களுடன் பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி போலீஸார், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேச்சுவார்தை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்துபோகச் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago