கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று முன்தினம் பார் வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் நடை பெறும் வாக்குப்பதிவு 4 இடங்களில் எண்ணப்படுகிறது. கடந்த 5-ம் தேதி பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத் தினை பார்வையிட்டு ஆய்வுசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடலூர் மற்றும் குறிஞ் சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வு செய்யப்பட்டது. இங்குவாக்குப்பெட்டிகள் பாதுகாத்துவைக்கப்பட உள்ள வைப்ப றைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. காவல்துறை மூலம் கண்காணிப்பதற்கும், வாக்குஎண்ணிக்கைக்கும் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்ள ஆய்வு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) பாபு, கடலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரன், குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார்,தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனி ருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் நடை பெறும் வாக்குப்பதிவு 4 இடங்களில் எண்ணப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago