தேர்தல் பணியில் ஈடுபடும் - முன்னாள் ராணுவத்தினருக்கு கரோனா தடுப்பூசி : ஆதார் அட்டை அவசியம்

By செய்திப்பிரிவு

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினர் விழுப்புரத் தில் உள்ள இசிஹெச்எஸ் பாலி கிளினிக்கில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி முன்னாள் படைவீரர் நல இயக்குநர் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் ராணுவத்தினர் கரோனை தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, 30 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக விழுப்புரம் இசிஹெச்எஸ் பாலி கிளினிக்கில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மேற்குறிப்பிட்ட பாலி கிளினிக்கில் வார நாட்களில் ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடுப்பூசி செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்