விருதுநகர் மாவட்டத்தில் 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் விருதுநகர் தொகுதியில் 13 வாக்குச்சாவடிகளும், சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளில் தலா 17 வாக்குச் சாவடிகளும், ராஜபாளையம் மற்றும் சாத்தூர் தொகுதிகளில் தலா 19 வாக்குச் சாவடிகளும், வில்லிபுத்தூர் தொகுதியில் 16 வாக்குச் சாவடிகளும், திருச்சுழி தொகுதியில் 20 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.வாக்குப் பதிவின்போது அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் இதுவரை 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல்துறையோடு இணைந்து பணியாற்ற துணை ராணுவப் படையினர் 8 கம்பெனிகளும், சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த 4 கம்பெனிகளும் வரவழைக்கப்பட உள்ளனர். மேலும், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்ளிட்ட 800 பேர் என மொத்தம் 4,100 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago