பவானி சாகர் அணையில் இருந்த காலிங்கராயன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்மையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தற்போது குறைந்துவிட்டது. அதேவேளையில் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.13 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 463 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று வரை பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்நிலையில் நீர் திறப்பு காலம் முடிந்ததையடுத்து நேற்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
குடி நீருக்காக அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago