கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட் பட்ட சணப்பிரட்டி காலனியில் அதிமுக சார்பில் கேசவன் என்பவர் வீட்டில் நோட்டுப்புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மார்ச் 5-ம் தேதி வந்த கிருஷ்ணராயபுரம் தொகுதி பறக்கும் படை அணி குழுவினர் அலுவலர் மணி மேகலை தலைமையில் கேசவன் வீட்டில் ஆய்வு நடத்தினர்.
இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோட்டுப்புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, கிருஷ்ணராய புரம் தேர்தல் நடத்தும் அலுவலர் நேற்று முன்தினம் பறக்கும்படை அலுவலர் மணி மேகலைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், சணப்பிரட்டி கேசவன் என்பவர் வீட்டில் ரூ.66,000 மதிப் புள்ள 3,030 நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பசுபதி பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தனிநபர் வீட்டுக்கு சென்று சோதனை செய்ய நேரிடும்போது, சோதனை செய்யும் அலுவலர் செலவினப் பார்வையாளர், வருமானவரித் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், தாங்கள் மேற்கண்ட நடைமுறைகள் எதையும் பின் பற்றாமல் தன்னிச்சையாக சோதனை மேற்கொண்டு நோட் டுப் புத்தகங்களை பறிமுதல் செய் துள்ளது தேர்தல் விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
எனவே, தேர்தல் விதிமுறை களை மீறி செயல்பட்டுள்ளதால், தங்கள் மீது தேர்தல் விதிமுறை களின்படி ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற் கான விளக்கத்தை இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத் துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், தங்கள் மீது மேல்நடவடிக்கை தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago