சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட மன்றத் தொகுதி வாரியாக வாக் குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் முதற்கட்ட பரிசோதனை செய்து, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அண்ணாதுரை கலந்து கொண்டு அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை ஒதுக்கீடு செய்தார்.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவையான 3,979 மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் (பேலட் யூனிட்), 2,950 கட்டுப்பாட்டு கருவிகள் (கன்ட்ரோல் யூனிட்), வாக்காளர்கள் யாருக்கு வாக்க ளித்தோம் என்பதை அறியும் 3,037வி.வி.பேட் கருவி கள் ஆகியவை கணினி மூலம் குலுக்கல் செய்யப் பட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விழுப் புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, கோட்டாட்சியர்கள் விழுப் புரம் ஹரிதாஸ், திருக்கோவிலூர் சாய்வர்தினி உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago