கடலூரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுவின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசா யிகளுக்கு ஆதரவாகவும் கடலூர் ஜவான் பவன் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப் பாளர் மாதவன் தலைமை தாங்கி னார்.

திமுக தலைமை தேர்தல் பணிக் குழு உறுப்பினர் இளபுகழேந்தி, காங்கிரஸ் மாநில நிர்வாகி வழக்கறிஞர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப் பையன், நகர செயலாளர் அமர் நாத், விடுதலைச் சிறுத்தை கட்சி யின் நகர செயலாளர் செந்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை மாணவரணி அமைப்பாளர் அருள் பாபு, மக்கள் அதிகாரம் மண்டல பொறுப்பாளர் பாலு, மணியரசன், ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் சுந்தரராஜன், கடலூர் அனைத்து பொது நல அமைப்பு தலைவர் வெண்புறா குமார், கடலூர் குடியிருப்போர் நல சங்க தலைவர் வெங்கடேசன், அச்சக உரிமையாளர் சங்கத் தலைவர் கார்த்திகேயன் திராவிட கழகம் மாதவன், வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கை குறித்து தொடர் முழக்கம் எழுப்பப்பட்டது.

விருத்தாசலம்

இதே போல் விருத்தாச்சலம் பாலக்கரை சந்திப்பில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ரவிச்சந்திரண் தலைமை யில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்