ஆரணி மற்றும் வந்தவாசியில் வாகன சோதனையில் - இருவரிடம் ரூ.3.85 லட்சம் பணம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

ஆரணி மற்றும் வந்தவாசியில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வியாபாரியிடம் ரூ.3.85 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கூட்டுச் சாலை யில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தி.மலை மாவட்டம் செய்யாறு வள்ளலார் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மலைகுழந்தை என்பதும், தனது சொந்த கிராமமான ஆரணி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் வீடு கட்டும் பணிக்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பணத்துக்கு ஆவணங்கள் இல்லை எனக் கூறி, தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத் தனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சு.காட்டேரி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் ரூ.56 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், வந்தவாசி அடுத்த எச்சூர் கிராமத்தில் வசிக்கும் எண்ணெய் வியாபாரி சுந்தரவரதன் என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் ஆவணங்கள் இல்லை என கூறி ரூ.56 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்