100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்னணு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடந்த தேர்தல் காலங்களில் மாவட்டத்தில் குறைவான சதவீதத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய மான, நேர்மையான வாக்குப் பதிவை யும், 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கையும் குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு வாக்காளர் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதேபோல, 100 சதவீதம் வாக்க ளிப்பதை வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வரைந்த ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான த.ரத்னா நேற்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையினரின் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாபுதீன், மகளிர் திட்ட அலுவலர் ஆர்.தண்டபாணி, கோட்ட கலால் அலுவலர் விக்டோரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்