திருமண மண்டபம், அடகுக் கடை அச்சகங்களுக்கு கடும் கட்டுப்பாடு :

By செய்திப்பிரிவு

தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சமுதாய நலக்கூடங்கள், அச்சகங் கள், கேபிள் டிவி, நகை அடகு கடைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற கூட்டத்தில் ஆட்சியர் விஷ்ணு பேசியதாவது:

திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும்போது அதன் விவரத்தை தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும.

வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப் படி குற்றமாகும். கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்கா ளர்களுக்கு விருந்து வைப்பது தடை செய்யப்பட்டு ள்ளது.

திருமண மண்டபங்களில் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5 மணிக்குமேல் வெளியூர் நபர்கள் தங்க அனுமதிக்க கூடாது. அடகு வைத்த நகைகளை திருப்புவற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாள்வதை அடகு கடைகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.அடகு நகைகளை மொத்தமாக திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், விளம்பரங்களை அச்சிட்டு பிரசுரம் செய்யும்போது அச்சக உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரியை அச்சிட வேண்டும். ஊடகங்களில் அனுமதியின்றி விளம்பரங்கள் ஏதும் ஒளிபரப்பக்கூடாது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், இதர சமுதாய கூடங்களின் உரிமையாளர்கள், நகை அடகு தொழில் புரிவோர், அச்சக உரிமையாளர், பதிப்பகத் தார்கள், கேபிள் டி.வி. உரிமை யாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

குமரி மாவட்டம்

குமரி மாவட்டத்தில் மொத்தம் 2,243 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2,809 மின்னணு இயந்திரங்களும், 2,782 கட்டுப்பாட்டு கருவிகளும், 2,937 விவிபாட் இயந்திரங்களும் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை 6 சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று (6-ம் தேதி) நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்