திருநெல்வேலி மாவட்டம் வீரவ நல்லூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.5.60 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
சேரன்மகாதேவி- அம்பா சமுத் திரம் சாலையில் வீரவநல்லூர் காவல் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையிலுள்ள வட்டாட்சியர் சந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேரன்மகா தேவியிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வெள்ளி கொலுசுகள், வளையல்கள் உள்ளிட்ட ரூ.5.60 லட்சம் மதிப்புள்ள 7.72 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுபோல், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் விலக்கு அருகே வட்டாட்சியர் வெற்றிச் செல்வி தலைமையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற ரூ.1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago