திருப்பத்தூர் அருகே வாகன சோதனையில் - வெளிமாநில மதுபானம் கடத்திய 3 பேர் கைது :

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபானத்தை திருப்பத்தூர் அருகே அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருப்பத் தூர் மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் வட்டம், கந்திலி அடுத்த எட்டிக்குட்டை பகுதியில் அமலாக்கப்பிரிவு காவல் துறை யினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் அவ் வழியாக வேகமாக வந்தது. காவல் துறையினரை கண்டதும் கார் தொலைவில் நிறுத்தப்பட்டு, பின்நோக்கிச்சென்றது. இதைக் கண்ட காவல் துறையினர் விரைந்து சென்று அந்த காரை மடக்கினர். பிறகு, அதிலிருந்த 3 பேரை கீழே இறக்கி காரை சோதனையிட்டபோது, கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானம் பெட்டி பெட்டியாக கடத்தி வரப்படுவது தெரியவந்தது.

உடனே, காரில் இருந்த 3,072 மதுபான பெட்டிகளை காவல் துறையினர் காருடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் எனக்கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கர்நாடக மாநில மதுபானங்களை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த ரவி (35), முத்துராஜ் (33), திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (27) ஆகிய 3 பேரை அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்