நுகர்பொருள் வாணிப கழகத்தை விவசாயிகள் முற்றுகை :

By செய்திப்பிரிவு

கீழ்நெல்லி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் வெம்பாக்கம் பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தொடர் மழை காரணமாக விளைச்சலும் கூடுதலாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. ஆனால், நெல் மூட்டைகளை விற்பனை செய்ய போதிய வாய்ப்பு இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. கீழ் நெல்லி கிராமத்தில் கடந்தாண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு இதுவரை திறக்கப்படவில்லை.

மேலும், எங்கள் கிராமத்தைச் சுற்றி 15 கி.மீ., தொலைவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கிடையாது. விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும்” என்றனர்.

இதையடுத்து, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கோபிநாத்தை சந்தித்து மனு அளித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்